செய்திகள்
தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைவு

Published On 2021-08-29 11:22 GMT   |   Update On 2021-08-29 11:22 GMT
கொரோனா பரவல் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ளது தென்னம்பாளையம் மார்க்கெட். இங்குள்ள மீன் சந்தைக்கு தினமும் சென்னை, தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமையானால் சந்தையில் மற்ற நாட்களை விட கூட்டம் அலைமோதும். கொரோனா பரவல் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல்  மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சந்தைக்கு மீன்வாங்க ஏராளமானோர் வந்தனர். மீன்கள் விலை குறைந்ததால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். பாறை மீன் ரூ.120க்கும், கட்லா மீன் ரூ.160க்கும், சங்கரா ரூ.220க்கும், ரோகு ரூ.130க்கும், விளாங்கு ரூ.120க்கும், ஜிலேபி மீன் ரூ.80க்கும், வஞ்சிரம் ரூ.650க்கும், மத்தி ரூ.160க்கும், இறால் ரூ.420க்கும் விற்பனையானது. 

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரமாக மீன்கள் விலை குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரம் சற்று பாதித்துள்ளது என்றனர். 
Tags:    

Similar News