செய்திகள்
கோப்புபடம்

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு - அதிரடி உத்தரவு

Published On 2021-08-29 06:57 GMT   |   Update On 2021-08-29 06:57 GMT
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 70 சதவீத ஆசிரியர்களே தடுப்பூசி போட்டுள்ளனர்.
திருப்பூர்:

வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. 

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தமாக பராமரித்தல், கற்பித்தல் பணிகளுக்கு ஏற்ப இருக்கை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 70 சதவீத ஆசிரியர்களே தடுப்பூசி போட்டுள்ளனர். பள்ளி திறப்பதற்குள் தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனால் ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பூசி முகாமில் கற்பித்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில்:

ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்போது தயார் நிலையில் வகுப்பறைகள் இருப்பது அவசியம். பள்ளி வகுப்பறை பெஞ்ச், டெஸ்க்குகளை முழுவதுமாக தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டியுள்ளது. இதற்காக கூடுதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News