செய்திகள்
நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட்டால்தான் கல்லூரிக்குள் மாணவர்கள் அனுமதி

Published On 2021-08-28 07:52 GMT   |   Update On 2021-08-28 07:52 GMT
தமிழகத்தில் மக்கள் மத்தியில் தடுப்பூசி போட ஏற்பட்டுள்ள ஆதரவை பார்த்து மத்திய அரசு கூடுதலான தடுப்பூசிகளை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடியாக தடுப்பூசி போடும் திட்டத்தை நந்தனம் கலைக் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந்தேதி திறக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது.

சென்னையை பொறுத்தவரை 90.11 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுவிட்டார்கள். 112 கல்லூரிகளிலும் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. 2 வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும்
தடுப்பூசி
செலுத்தப்படும். கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தி இருக்கிறார்.



தமிழகத்தில் மக்கள் மத்தியில் தடுப்பூசி போட ஏற்பட்டுள்ள ஆதரவை பார்த்து மத்திய அரசு கூடுதலான தடுப்பூசிகளை ஒதுக்கி உள்ளது. இந்த மாதம் இதுவரை தட்டுப்பாடு இல்லை. 23 லட்சம்
தடுப்பூசி
கூடுதலாக வந்துள்ளது. இன்றும் 11 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகள் வருகிறது. இதுவரை 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News