செய்திகள்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

கே.டி.ராகவன் ராஜினாமா- அண்ணாமலை வெளியிட்ட விளக்கமான அறிக்கை

Published On 2021-08-24 11:04 GMT   |   Update On 2021-08-25 03:29 GMT
பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை:

கே.டி.ராகவன் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து அவர் தமிழக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ  குறித்த செய்திகளை அறிந்தேன்.

மதன் ரவிச்சந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவர இருக்கிறது என்று சொல்லி இருப்பது, அவருக்கு ஏதேனும் ஒரு உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.



பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி  தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து  சாட்டப்படும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த வீடியோ பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஒரு சில நபர்கள் தான் காரணம் என்றும் மதன் கூறியிருக்கிறார். நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும், கட்சியின்  தலைவருக்கும், அமைப்புச் செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சிப்படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும். அவரவர் செயலுக்கும், அவரவர் நடவடிக்கைக்கும், அவரவர் தான் பொறுப்பேற்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News