செய்திகள்
அதிமுக

அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்- ஓ.பி.எஸ்., எடப்பாடி அறிவிப்பு

Published On 2021-08-20 09:49 GMT   |   Update On 2021-08-20 09:49 GMT
அரியலூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணுழி இந்திராநகர் இணை செயலாளர் ப.தியாகராஜன் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும் அரியலூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள மண்ணுழி இந்திராநகர் இணை செயலாளர் ப.தியாகராஜன் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

இவருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News