செய்திகள்
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தேனி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2021-08-18 10:17 GMT   |   Update On 2021-08-18 10:17 GMT
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 16வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி தடுத்து நிறுத்தப்பட்டது.
தேனி:

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 16வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி தடுத்து நிறுத்தப்பட்டது.

இத்திருமணம் பற்றிய தகவல் அறிந்தவுடன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டுலைன் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனடியாக திருமணம் நடைபெறவிருந்த குழந்தையின் இல்லத்திற்கு நேரில் சென்று உரிய விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமியின் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் சிறுமிக்கும், பெற்றோருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. பின்பு சிறுமியை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறுமியின் விருப்பத்தின்பேரில் தற்காலிகமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், குழந்தை திருமணத்திற்கு தூண்டியவர்கள் மீதும் குழந்தை திருமணம் தடைச்சட்டத்தின்படி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News