செய்திகள்
தேர்வு

பிளஸ் 2 துணைத்தேர்வு- நெல்லையில் 45 பேர் ‘ஆப்சென்ட்’

Published On 2021-08-06 10:08 GMT   |   Update On 2021-08-06 10:08 GMT
நெல்லை, பாளையில் 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இன்று 150 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
நெல்லை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் தனித்தேர்வர்களுக்கும், பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகளுக்கும் இன்று துணைத்தேர்வுகள் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் துணைத்தேர்வுகளுக்கு ஜெயில் கைதிகள் உள்பட தனித்தேர்வர்கள் மட்டும் 195 பேர் விண்ணப்பத்திருந்தனர்.

இதற்காக நெல்லை, பாளையில் 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இன்று 150 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 45 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வையொட்டி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News