செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 ஆயிரத்து 750-ஐ தாண்டியது

Published On 2021-08-05 10:02 GMT   |   Update On 2021-08-05 10:02 GMT
சேலம் மாவட்டத்தில் இன்று காலை பலர் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொல்லைகளால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 75 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 83 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்கள் சேலம் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

தொடர்ந்து இன்று காலை பலர் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொல்லைகளால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர். அவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பிற்பகல் நிலவரப்படி கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 750-ஐ தாண்டியது. கொரோனாவுக்கு இதுவரை 1568 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News