செய்திகள்
காங்கிரஸ்

தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர்

Published On 2021-08-05 06:59 GMT   |   Update On 2021-08-05 06:59 GMT
பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் இந்த மாத இறுதிக்குள் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்று 2½ ஆண்டுகள் ஆகி விட்டதால் அவரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார் என்றதும் பதவியை பிடிக்க தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.

ஆனால் செல்லக்குமார் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகிய 3 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் இந்த மாத இறுதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

செயல் தலைவர்களாக விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், மோகன்குமார மங்கலம், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் இருக்கிறார்கள். மறைந்த வசந்தகுமார் எம்.பி.யும் செயல் தலைவராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு புதிய செயல்தலைவர் நியமிக்கப்படவில்லை.

மாநில தலைவர் மாற்றப்படும்போது செயல் தலைவர்களும் மாற்றப்படுவார்கள். எனவே செயல் தலைவர் பதவியை பிடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது.
Tags:    

Similar News