செய்திகள்
கேரளாவில் இருந்து உடுமலை வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி-உடுமலை கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

Published On 2021-08-05 06:51 GMT   |   Update On 2021-08-05 06:51 GMT
அத்தியாவசிய பணிக்கு வருவோர் மட்டும் உரிய விசாரணை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
உடுமலை:

கேரள மாநிலம் மூணாறு, மறையூர் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும்  பொதுமக்கள் மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக திருப்பூர் மாவட்டம்  உடுமலை வந்து செல்கின்றனர். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பொதுமக்கள் செல்வதுடன் காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் உடுமலையில் இருந்து மறையூர், மூணாறு செல்லும் சாலையில் தமிழக-கேரள எல்லையான சின்னாறில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. அதேபோல் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட ஒன்பதாறில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்று  அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய தற்கான சான்று ஏதாவது ஒன்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி உரிய சான்றுகளுடன் வருபவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் சுகாதாரத்துறை அலுவலர்களை கொண்ட தனிக்குழு அமைத்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பணிக்கு வருவோர் மட்டும்  உரிய விசாரணை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று என ஏதாவது ஒன்று வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.
Tags:    

Similar News