செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி காணிக்கை வசூல்

Published On 2021-08-05 03:57 GMT   |   Update On 2021-08-05 03:57 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 22 லட்சத்து, 24 ஆயிரத்து 676 மற்றும் 2 கிலோ 626 கிராம் தங்கம், 6 கிலோ 54 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் காணிக்கையாக கிடைத்தது.
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று கோவில் இணைஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி இணை ஆணையர் சுதர்சன், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில்மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில்ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், ரூ.1 கோடியே 22 லட்சத்து, 24 ஆயிரத்து 676 மற்றும் 2 கிலோ 626 கிராம் தங்கம், 6 கிலோ 54 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News