செய்திகள்
கோப்புபடம்

குஜராத் படேல் சிலையை பார்க்க கரூர் வழியாக சிறப்பு ரெயில்

Published On 2021-08-04 14:38 GMT   |   Update On 2021-08-04 14:38 GMT
இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவு தென்னிந்தியாவில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண சிறப்பு ரெயில் சேவை அறிவித்துள்ளது.

திருச்சி:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவு தென்னிந்தியாவில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண சிறப்பு ரெயில் சேவை அறிவித்துள்ளது. இந்த ரெயில் வரும் 29-ந் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை மார்க்கமாக ஐதராபாத் அருங்காட்சியகம், அமிர்தசரஸ்(பஞ்சாப்) பொற்கோவில், ஜாலியன் வாலாபாக், பிங்க் சிட்டி எனப்படும் ஜெய்பூர், குஜராத் மாநிலத்தில் உள்ள கடல் கோவில் வழியாக சர்தார் வல்லபாய் சிலையை அடையும்.

12 நாட்கள் சைவ உணவு, தங்கும் இடம், ரெயில் மற்றும் உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.11 ஆயிரத்து 340 ஆகும். அரசின் கொரோனா விதிகளின்படி குடும்ப சுற்றுலாவாக இந்த ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு 8287931977, 8287931974 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News