செய்திகள்
கோப்புபடம்

கோவில் உண்டியல் பணத்தை திருடி நாடகமாடிய பூசாரி

Published On 2021-08-03 11:54 GMT   |   Update On 2021-08-03 11:54 GMT
கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருப்பூர் :

திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகரில் வீர மாத்தியம்மன் கோவில் உள்ளது.  இக்கோவிலில் உள்ள உண்டியல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறந்து எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது.

 இதையடுத்து அந்த பணத்தை வைத்து உண்டியல் பூட்டப்பட்டது. இந்தநிலையில் அக்கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் மணிகண்டன் (வயது 28) என்பவர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதில், மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்று, உண்டியலில் இருந்த பணம் மற்றும் பல்வேறு பொருட்களை  திருடி சென்று விட்டனர். எனவே மர்மநபர்கள் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பூசாரி மணிகண்டன் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம்  விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான  தகவல்களை கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது மணிகண்டனே உண்டியல் பணத்தை திருடியதுடன், போலீசில் புகார் செய்து நாடகமாடியது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் போலீசார்  தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News