செய்திகள்
திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள முத்துசாமி வீதியில் கொசு மருந்து அடிக்கப்பட்ட காட்சி.

நொய்யல் ஆற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் பாதிப்பு

Published On 2021-08-03 10:32 GMT   |   Update On 2021-08-03 10:32 GMT
நீண்ட காலமாக நொய்யல் ஆறு தூர்வாரப்படாமல் செடிகள், மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் ஏராளமான குடியிருப்பு பகுதிகள், கடைகள் உள்ளன. இந்தநிலையில் நொய்யல் ஆறு தூர்வாரப்படாத காரணத்தால் துர்நாற்றம் வீசி வருவதோடு விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் மாறிவருகிறது. மேலும் ஒரு சிலர் கழிவுகளை கரையோரம் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:

நீண்ட காலமாக நொய்யல் ஆறு தூர்வாரப்படாமல் செடிகள், மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. ஆற்றில் தேங்கும் நீரால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவுபடி அவ்வப்போது மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து அடித்து விட்டு செல்கின்றனர். ஆனாலும் கொசுக்களின் தொந்தரவு தீர்ந்தபாடு இல்லை.
 
எனவே நொய்யல் ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும் என்றனர்.
Tags:    

Similar News