செய்திகள்
கோப்புப்படம்

குமரி மாவட்டத்தில் 27 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்

Published On 2021-07-31 11:21 GMT   |   Update On 2021-07-31 11:21 GMT
குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் சுமார் 17 லட்சம் பேர் உள்ளனர். இதில் 4,39,512 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 11,374 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 6,693 பேருக்கு 2-ம் டோஸ் என மொத்தம் 18,067 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று வரை 4,39,512 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 96,461 பேருக்கு 2-ம் டோஸ் என மொத்தம் 5,35,973 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் சுமார் 17 லட்சம் பேர் உள்ளனர். இதில் 4,39,512 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். இது மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் அதிகமான மக்கள் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். கிராமப்புறங்களில் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இன்றும் மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

38 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு காலையிலேயே குவிந்திருந்தனர். நாகர்கோவில் பெருவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 6 இடங்களில் நேரடி டோக்கன் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோட்டார் கவிமணி பள்ளியில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
Tags:    

Similar News