செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கோவை மாவட்டம் முழுவதும் இன்று 64 மையங்களில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2021-07-31 10:59 GMT   |   Update On 2021-07-31 10:59 GMT
மத்திய மண்டலத்தில் 5 மையங்களிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு கோவேக்சின் தடுப்பூசி 2-வது தவணை மட்டும் செலுத்தும் பணி நடைப்பெற்றது.

கோவை:

கோவை மாவட்டத்தில் தடுப்பூசிகளின் இருப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து இன்று மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை வழக்கம்போல 8 மணிக்கு தடுப்பூசி மையங்கள் கண்டறியப்பட்டது. அதற்கான டோக்கன் 9 மணிக்கு வழங்கப்பட்டு, டோக்கன் பெற்றவர்களுக்கு 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. மாநகர பகுதியில் 5 மண்டலங்களிலும் செலுத்தப்பட்டது.

மேற்கு மற்றும் தெற்கு மண்டலத் தில் 7 மையங்களிலும், வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் 6 மையங்களிலும், மத்திய மண்டலத்தில் 5 மையங்களிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு கோவேக்சின் தடுப்பூசி 2-வது தவணை மட்டும் செலுத்தும் பணி நடைப்பெற்றது.

தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு சுகாதார துறை ஊழியர்கள் டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்தினர்.ஒவ்வொரு மையத்திலும் தலா 200 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

புறநகர் பகுதியில் காரமடை, மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆனைமலை, தொண்டாமுத்தூர்,சூலூர், பொள்ளாச்சி ஆகிய வட்டங்களில் 33 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 பேருக்கும், 22 இடங்களில் தலா 100 பேருக்கும் கோவேக்சின் 2-வது தவனை மட்டும் செலுத்தப்பட்டது இன்று கோவை மாவட்டம் முழுவதும் 64 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News