செய்திகள்
பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

கொரோனா தடுப்பு பணி - அரசுக்கு ஒத்துழைக்க அமைச்சர் வேண்டுகோள்

Published On 2021-07-31 09:16 GMT   |   Update On 2021-07-31 09:16 GMT
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 1,152 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம், காங்கயம் மற்றும் தாராபுரம் வட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 1,152 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டாக்டர் எஸ். வினீத் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்” பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, பல்லடம் மற்றும் அவினாசி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், 3-ம் அலையின் தாக்கத்திலிருந்து நம்மையும், நம்மை சார்தோரையும் பாதுகாத்து கொள்ளவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

தொடர்ந்து “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், வருவாய்த்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், இணை இயக்குநர் (வேளாண்மை) மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News