செய்திகள்
உணவகத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்.

தாராபுரத்தில் 3 கிலோ கலப்பட உணவுகள் அழிப்பு

Published On 2021-07-30 11:21 GMT   |   Update On 2021-07-30 11:21 GMT
பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் சிரஞ்சீவி, விஜயராஜா, பாலமுருகன், ரகுநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கடைவீதி உட்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட உணவு, புகையிலை பொருட்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அனுமதியற்ற செயற்கை  வர்ணபொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட  உணவு, புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள் சுமார் 3 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. உணவு பொருட்கள் கலப்படம் பற்றிய புகார்களுக்கு  9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News