செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள்

Published On 2021-07-30 07:55 GMT   |   Update On 2021-07-30 07:55 GMT
ஏப்ரல், மே மாதங்களில் கோவாக்சின் செலுத்தியவர்கள் 2-வது தவணைக்கு தேடி அலைகின்றனர்.
திருப்பூர்:

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்து பொதுமக்களுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இதிலும் கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டத்துக்கு கோவாக்சின் மருந்து வருவதில்லை. 

இதனால் ஏப்ரல், மே மாதங்களில் கோவாக்சின் செலுத்தியவர்கள் 2-வது தவணைக்கு தேடி அலைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் 1.5 மாதம் கடந்தும் தவிக்கின்றனர். 

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மாதத்துக்கு ஒருமுறை தான் கோவாக்சின் அனுப்புகின்றனர். இந்த மாதம் வரவில்லை. திருப்பூரில் இதுவரை 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 87 ஆயிரம் பேருக்கு கோவாக்சின், மீதி 6.32 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவாக்சின் திருப்பூர் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் தட்டுப்பாடு உள்ளது.

ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் இரண்டாம் டோஸ் கேட்டு வருவோரின் பெயர், மொபைல் போன் எண் விவரம் பெற்று பதிவேடு பராமரிக்கப்படுகிறது. தடுப்பூசி மருந்து வந்த பின் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News