செய்திகள்
மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு -முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

Published On 2021-07-28 12:06 GMT   |   Update On 2021-07-28 13:50 GMT
தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 2018 ஏப்ரல் 4-ம் தேதி போராடியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏழு தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News