செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று

Published On 2021-07-28 10:41 GMT   |   Update On 2021-07-28 10:41 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியான நிலையில், 47 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 440 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று குருசாமிபாளையம் மற்றும் தேவனாங்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 442 ஆக அதிகரித்து உள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 46 ஆயிரத்து 907 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 909 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 956 ஆக உயர்ந்தது.

நேற்று 62 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 45 ஆயிரத்து 963 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 551 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News