செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

Published On 2021-07-28 05:06 GMT   |   Update On 2021-07-28 05:06 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.184 குறைந்து ரூ.36 ஆயிரத்து 16-க்கு விற்றது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.144 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 160-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 520 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.71.40-க்கு விற்கிறது.
Tags:    

Similar News