செய்திகள்
கோப்புபடம்

வெளி மாவட்டங்களில் பனியன் நிறுவனங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-07-27 10:43 GMT   |   Update On 2021-07-27 10:43 GMT
உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தைத்துக்கொடுக்க அதிகளவில் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் தேவைப் படுகின்றன.
திருப்பூர்:

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்  உள்ளன. இங்கு 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 3 லட்சம் பேர் வட மாநில தொழிலாளர்கள்.

இந்தநிலையில்  பின்ன லாடை  நிறுவனங்களில் தொழிலாளர்கள்  பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையிலும், திருப்பூர் நிறுவனங்கள்  வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்கும் வகையிலும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் ஜவுளி பூங்கா மற்றும்  ஜாப் ஒர்க் நிறுவனங்களை  அமைக்க  திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள்  அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசும் வெளி மாவட்டத்தில் எந்த இடங்களில் ஜவுளி பூங்கா அமைக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

இதனிடையே  திருப்பூரை சேர்ந்த தனியார் அறக்கட்டளை தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தி பின்னலாடை துறையில் பணிபுரிய உகந்த தொழிலாளர்கள்  அதிகமுள்ள இடங்களை கண்டறிந்துள்ளன.

இதையடுத்து உள்ளூர் முதலீட்டாளர்களை கொண்டு தேர்வு செய்யப் பட்ட பகுதிகளில் ஜாப் ஒர்க் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது தொடங்கியுள்ளது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தலா 3 இடங்கள், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் தலா 2 என 4 மாவட்டங்களில் முதல் கட்டமாக 10 இடங்களில், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மனிதவள அமைப்பை சேர்ந்த  நிர்வாகி சுந்தரேசன் கூறுகையில், திருப்பூர் பின்னலாடை துறைக்கு தேவையான தொழிலாளர்கள் தமிழக த்திலேயே உள்ளனர்.

பல்வேறு காரணங்களால் இடம்பெயர விரும்பாமை, இயலாமைகளால் பெரும்பாலானோர் திருப்பூர் நோக்கி வருவதில்லை. அதேநேரம்  தங்கள் பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனம் அமைந்தால்  இணைந்து பணிபுரிய தொழிலாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தைத்துக்கொடுக்க அதிகளவில் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் தேவைப் படுகின்றன.

ஏற்கனவே நடத்திய கள ஆய்வு அடிப் படையில்  திருப்பூருக்காக ஆடை தயாரித்து தரும் ஜாப்ஒர்க் நிறுவனங்களை தொழிலாளர் மிகுந்த  தமிழகத்தின் பிற மாவட் டங்களில் ஏற்படுத்த உள்ளோம்.

முதல்கட்டமாக 4  மாவட்டங்களில் 10 இடங் களில் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக  அந்தந்த பகுதி முதலீட்டாளர்களிடம் பேச்சு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட முதலீட்டாளர்கள்  திருப்பூருக்கு நேரடியாக வந்து  தங்களுக்கு ஆர்டர் வழங்க உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டு சென்று ள்ளனர்.

விரைவில்  வெளிமாவட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்கள் படிப்படியாக இயக்கத்தை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News