செய்திகள்
மழை

கோவையில் தொடர்மழையால் 3 குளங்கள் நிரம்பியது

Published On 2021-07-27 10:36 GMT   |   Update On 2021-07-27 10:36 GMT
கொளராம்பதி குளத்தில் 65 சதவீதமும், நரசாம்பதி குளத்தில் 75 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளங்களில் சுமார் 90 சதவீதம் அளவு நீர் உள்ளது.
கோவை:

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சிறுவாணி அணை மற்றும் நொய்யலைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது:-

தொடர் மழையால் 5 குளங்களுக்கு நீர்வரத்து இருந்தது. அதில் செம்மேட்டை அடுத்துள்ள உக்குளம் நிரம்பிவிட்டது. சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் 9 குளங்கள் பயன்பெறுகின்றது.

அவற்றில் புதுக்குளம் நிரம்பிவிட்டது. கொளராம்பதி குளத்தில் 65 சதவீதமும், நரசாம்பதி குளத்தில் 75 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளங்களில் சுமார் 90 சதவீதம் அளவு நீர் உள்ளது.

மாதம்பட்டி அருகேயுள்ள தடுப்பணையில் இருந்து குனியமுத்தூர் வாய்க்கால் மூலம் பயன்பெறும் கங்கநாராயணசமுத்திரம் குளம்முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

சொட்டையாண்டி குட்டையில் 35 சதவீதமும், பேரூர் பெரிய குளத்தில் 65 சதவீதமும், குனியமுத்தூர் செங்குளத்தில் 35 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. குறிச்சி குளத்தில் 80 சதவீதம், வெள்ளலூர் குளத்தில் 50 சதவீதம், சிங்காநல்லூர் குளத்தில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News