செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது

Published On 2021-07-27 06:02 GMT   |   Update On 2021-07-27 06:02 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ. 36,032-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 36 ஆயிரத்து 200-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36 ஆயிரத்து 32-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4 ஆயிரத்து 504 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.71 ஆயி ரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90-க்கு விற்கிறது.
Tags:    

Similar News