செய்திகள்
அப்துல்கலாமுடன் பேரன் ஷேக் தாவூத், தனது மகனுடன்.

அப்துல் கலாமின் ஆசை...

Published On 2021-07-27 04:49 GMT   |   Update On 2021-07-27 06:32 GMT
தாத்தாவுக்கு குழந்தைகளை ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை குடும்பத்தோடு நான் தாத்தாவை சந்தித்த போதெல்லாம் எனது குழந்தையுடன் ஒரு மணி நேரம் மகிழ்ச்சியுடன் விளையாடினார்.
அப்துல் கலாம் குறித்து அவருடைய அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரின் பேரன் சேக்தாவூது கூறியதாவது:-

தாத்தா அப்துல் கலாம் எப்போதுமே கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்பினார். ஆசிரியராகவும், பாதுகாப்பு துறையில் பணியாற்றிய போதும், ஜனாதிபதியாக இருந்த போதும் கூட ஒவ்வொரு முறை ராமேசுவரம் வந்த போதும், குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்ந்து பார்த்து பேசுவதில்தான் அதிக மகிழ்ச்சி கொண்டார். அதனால் அவர் ராமேசுவரத்துக்கு வந்தபோதெல்லாம் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் பகுதியில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் அன்று வீட்டில் கூட்டுக் குடும்பமாகவே இருந்து அவரை வரவேற்றோம். அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

என்னிடம் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமுடன் இருக்க வேண்டுமென தெரிவித்தார். அதன்படி தினமும் புத்தகம் படிப்பதை இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறேன்.

குழந்தைகளை அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை குடும்பத்தோடு நான் தாத்தாவை சந்தித்த போதெல்லாம் எனது குழந்தையுடன் ஒரு மணி நேரம் மகிழ்ச்சியுடன் விளையாடினார். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. அந்த ஆசை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News