செய்திகள்
ஆய்வில் ஈடுபட்ட ஏற்றுமதியாளர்கள்

தென்மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்கா-தொழில்துறையினர் ஆய்வு

Published On 2021-07-24 11:41 GMT   |   Update On 2021-07-24 11:41 GMT
3 மாவட்டங்களிலும் சிப்காட்டிற்கு சொந்தமான இடங்களை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் :

தமிழக அரசு ஆயத்த ஆடை பூங்காவை தென் மாவட்டங்களில் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளது.

அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், இணை செயலாளர் செந்தில்குமார், உள்கட்டமைப்பு துணை கமிட்டி தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் நவமணி மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சிப்காட் அதிகாரிகள் அருண்குமார், ரவீந்திரா, லீயோ உள்பட பலர் 3 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். 

3 மாவட்டங்களிலும் சிப்காட்டிற்கு சொந்தமான இடங்களை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். குடிநீர் வசதி, தொழிலாளர்கள் வசதி, உள்கட்டமைப்புக்கு தேவையான வசதி போன்றவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News