செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை நீா்நிலைகளில் இருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் நீக்கம்

Published On 2021-07-23 23:27 GMT   |   Update On 2021-07-23 23:27 GMT
அதிநவீன இயந்திரங்களான நீா் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீா்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீா் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீா்வழி கால்வாய்களில் படிந்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ஆகாய தாமரைகள் 2 நவீன ஆம்பிபியன், 3 சிறிய ஆம்பிபியன் மற்றும் 4 ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News