செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மாற்றுத்திறனாளிக்கும் பயன்படும் பேருந்துகளை வாங்க வேண்டும் -ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-07-22 11:40 GMT   |   Update On 2021-07-22 14:49 GMT
10 சதவீத பேருந்துக்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடன் இருக்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது.
சென்னை:

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் இல்லாத புதிய பேருந்துக்களைவாங்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் பேருந்திற்குள் ஏறி பயணிக்கும் வகையில் பேருந்துகள் இல்லை என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மனியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசு புதிதாக 4,000 பேருந்துக்களை வாங்க உள்ளது. அவற்றில் 10 சதவீதம் பேருந்துக்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடன் இருக்கும் என அரசு கூறியுள்ளது. 25 சதவீத பேருந்துக்கள் சக்கர நாற்காலியுடன் மாற்றுத்திறனாளிகள் ஏற வசதியுடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.



முன்னதாக வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்தை தடைசெய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை அளித்திருந்தார். இன்று அந்த மனுவை விசாரித்தபோது கொரோனா பாதித்த நிலையில் இந்தியா ஏழை நாடாக உள்ளது என்று போக்குவரத்துக் கழகம் கூறியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏன் ஆட்சியாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏழைகளாக உள்ளனரா? என கேள்வி எழுப்பினர்.
Tags:    

Similar News