செய்திகள்
கோப்புபடம்

கிராமமக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

Published On 2021-07-22 10:01 GMT   |   Update On 2021-07-22 10:01 GMT
மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:

ஊரடங்கு தளர்வுக்கு பின் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கணக்கம்பாளையம் கிராமத்தை தத்தெடுத்துள்ளனர். அங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் கொரோனா வைரஸ் போல வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தன்னார்வலராகவும் பணியாற்றினர்.

நிகழ்ச்சியில் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்  மற்றவர்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News