செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-07-17 10:37 GMT   |   Update On 2021-07-17 12:33 GMT
சென்னையைப் பொருத்தவரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பதினாறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் கனமழைக்கும், சென்னையில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News