செய்திகள்
வழக்கு பதிவு

மதுபோதையில் வாகனங்களை ஓட்டிய 800 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2021-07-14 08:31 GMT   |   Update On 2021-07-14 08:31 GMT
மது குடித்துவிட்டு தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: 

சென்னையில் போலீசார் தினமும் மாலை வேளைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

குடிபோதையில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வாரத்தில் 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுபோதையில் பிடிபட்ட 800 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் பேர் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதும் தெரிய வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று 168 வழக்குகள் பதிவாகி உள்ளது. சனிக்கிழமையன்றும் அதே அளவுக்கு வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, ‘‘மது குடித்துவிட்டு தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

எனவே வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு தங்களது வாகனங்களை இயக்க வேண்டாம். அது போன்று போதையில் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்றும் போலீசார் எச்சரித்தனர்.
Tags:    

Similar News