செய்திகள்
பிஆர் பாண்டியன்

தஞ்சையில் 15-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்

Published On 2021-07-09 02:23 GMT   |   Update On 2021-07-09 02:23 GMT
மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் வருகிற 15-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்:

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று சவால் விடுகிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்க முயற்சிக்கும் செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீரை நம்பி 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. அதனை தொடர முடியாத நிலை உள்ளது. பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் வருகிற 15-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாளில் ராசிமணல் அணை கட்டுவோம், மேகதாது அணையை தடுத்து நிறுத்துவோம், கருகும் பயிரை காப்பாற்ற உரிய தண்ணீரை பெறுவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், வலியுறுத்தியும் தஞ்சையில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
Tags:    

Similar News