செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2021-07-08 05:59 GMT   |   Update On 2021-07-08 05:59 GMT
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக நேற்று பதவி ஏற்றுள்ளார்.

அவருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News