செய்திகள்
வைகோ

வைகோ மீதான வழக்கு ரத்து

Published On 2021-07-08 01:40 GMT   |   Update On 2021-07-08 01:40 GMT
சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை:

மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கவர்னர் மாளிகை குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதை கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்துவந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வைகோ உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News