செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-07-07 07:22 GMT   |   Update On 2021-07-07 07:22 GMT
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.



இதையடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பில் நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறேன். அவர், தன்னுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஒருவேளை பாஸ்போர்ட் இல்லை என்றால் அது தொடர்பான பிரமாண மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.10 ஆயிரத்திற்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

இரண்டு வாரத்திற்கு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின்பு விசாரணைக்கு தேவைப்படும் போது போலீசார் அழைக்கும்பட்சத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும்.



Tags:    

Similar News