செய்திகள்
கோப்புப்படம்

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13.79 கோடிக்கு மதுவிற்பனை

Published On 2021-07-06 09:02 GMT   |   Update On 2021-07-06 09:02 GMT
கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 2 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. காலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. மதியத்திற்கு பிறகு அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

மதுபிரியர்கள் ஏராளமானோர் கடை முன்பு குவிந்து மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஒரு சிலர் மதுவை வாங்கியதும், பட்டாசு வெடித்தும், பழம், தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். கோவை வடக்கு மண்டலத்தில் ரூ.7 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரத்திற்கும், தெற்கு மண்டலத்தில் 6 கோடியே 53 லட்சம் என நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.13 கோடியே 79 லட்சத்து 33 ஆயிரத்திற்கு மது விற்பனையாகி உள்ளது.

Tags:    

Similar News