செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

Published On 2021-07-06 06:52 GMT   |   Update On 2021-07-06 06:52 GMT
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 490 ஆக உள்ளது.

சென்னை:

தங்கம் விலை கடந்த மாதத்தில் தொடர்ந்து குறைந்ததையடுத்து பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே சில நாட்களாக தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டு வருகிறது.

விலையில் ஏற்ற-தாழ்வு இருந்தாலும் சிறிய அளவில் விலை குறைந்தது. நேற்று தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்து 784 ஆகவும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 473 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்ததால் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 490 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.74 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.90-க்கு விற்கிறது.

Tags:    

Similar News