செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது

Published On 2021-07-02 05:29 GMT   |   Update On 2021-07-02 05:29 GMT
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,720-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலையில் இன்றும் உயர்வு காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 560-க்கு விற்றது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 720-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 465 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.73 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கு விற்கிறது.

Tags:    

Similar News