செய்திகள்
கோப்புப்படம்

உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி-சாய ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-06-25 07:12 GMT   |   Update On 2021-06-25 07:12 GMT
தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இன்றி தவிக்கின்றனர். உணவு தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர்:

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி திருப்பூரில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களும், ஜாப்ஒர்க் நிறுவனங்களும் 50 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இன்றி தவிக்கின்றனர். உணவு தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு ஆடை தயாரித்து நாடுமுழுவதும் வியாபாரம் செய்கின்றன.ஏற்றுமதியை போன்று உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையும் மிகவும் முக்கியமானது.

தொழில் நலன் மற்றும் தொழிலாளர் நலன் கருதி திருப்பூரில் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களும் குறைந்தபட்சம் 50 சதவீத தொழிலாளருடன் இயங்க உத்தரவிட வேண்டும் என திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News