செய்திகள்
கோப்புப்படம்

ஜார்க்கண்ட்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் திருப்பூரில் நின்று செல்ல வடமாநில பயணிகள் கோரிக்கை

Published On 2021-06-25 07:12 GMT   |   Update On 2021-06-25 07:12 GMT
காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம் , ஈரோடு வழியாக ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலம்  ஹாட்டியாவில் இருந்து கேரளமாநிலம் எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற  28-ந்தேதி மாலை 6:25 மணிக்கு ஹாட்டியாவில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் 30-ந்தேதி காலை 9:45 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றடையும். 

மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 1-ந் தேதி இரவு 11:25 க்கு புறப்படும் ரெயில் 3-ந் தேதி மதியம் 2:35 மணிக்கு ஹாட்டியாவை சென்றடையும்.
காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காமல் கோவை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநில பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 

வடமாநிலங்களுக்கு குறைந்த அளவே ரெயில்கள் இயக்கப்படுகிறது.சிறப்பு ரெயில் திருப்பூரில் நிற்காமல் சென்றால் கோவை அல்லது ஈரோடு சென்று ரெயிலில் ஏற வேண்டிய சூழல் ஏற்படும். பஸ் வசதி இல்லாததால் சிரமம் ஏற்படும்.எனவே ஜார்க்கண்ட்-எர்ணாகுளம் சிறப்புரெயில் திருப்பூரில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.
Tags:    

Similar News