செய்திகள்
பள்ளப்பாளையம் குளத்தில் உருவான பசுமை தீவை படத்தில் காணலாம்

பள்ளப்பாளையம் குளத்தில் பசுமை தீவு

Published On 2021-06-25 06:43 GMT   |   Update On 2021-06-25 06:43 GMT
வடகிழக்கு பருவ மழை காலத்தில் 2 குளங்களையும் நிரப்ப வேண்டும் என்பதால் 2 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :

பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு முக்கிய நீராதாரமாக பள்ளபாளையம், சாமளாபுரம் குளங்கள் உள்ளன. இந்தநிலையில் திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நீர் மேலாண்மை அறக்கட்டளை ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் இக்குளங்களை தூர்வாரி புனரமைக்கும் பணியை துவக்கியுள்ளது.

இதன் மூலம் பள்ளபாளையம் குளம் முழுவதும் தூர்வாரி சுற்றிலும் கரைகள் வலுப்படுத்தப்படும். சாமளாபுரம் குளத்துக்கு தண்ணீர் வழங்கும் கிழக்கு பகுதியை தூர்வாரி மண் கரைகள் அமைக்கப்படுகின்றன.வெளிநாட்டு பறவைகள் வலசை வரும்போது பள்ளபாளையம் குளத்தில் சில மாதங்கள் தங்குகின்றன. அதற்காக குளங்களுக்குள் தலா இரண்டு தீவு போன்ற மண்திட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

அங்கு பழவகை மரங்களை அடர்த்தியாக நட்டு பல்லுயிர் சுழற்சி மையமாகவும் மாற்றி பறவைகளின் சரணாலயமாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளனர். தற்போது குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் 2 குளங்களையும் நிரப்ப வேண்டும் என்பதால் 2 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:

பள்ளபாளையம் குளத்தை தூர்வாரி நடைபயிற்சி பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படும்.பறவைகளுக்காக இரண்டு குளங்களில் நான்கு பசுமை தீவு அமைக்கப்படும். சங்கத்துடன் இணைந்து பசுமை பணியில் தன்னார்வலர்களும் கரம் கோர்க்கலாம் என்றனர்.
Tags:    

Similar News