செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி: தமிழக அரசின் அறிக்கை தெளிவாக இல்லை- ஐகோர்ட் கருத்து

Published On 2021-06-24 01:56 GMT   |   Update On 2021-06-24 01:56 GMT
சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதால், அவர்களுக்கு வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

தமிழக அரசின் அறிக்கை தெளிவில்லாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பலவகையினர் உள்ளனர். அவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படும் என்ற தகவல் இல்லை.

சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை அடைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News