செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு உத்தரவை மீறிய 231 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-23 11:46 GMT   |   Update On 2021-06-23 11:46 GMT
கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தேவையின்றி வாகனங்களில் வலம் வருபவர்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தேவையின்றி வாகனங்களில் வலம் வருபவர்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டதில், முககவசம் அணியாமல் வெளியே வந்த 183 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.32,400-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் 15 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.7,500 வசூலிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 28 வழக்குகள் பதியப்பட்டன. மது பாட்டில்களை பதுக்கியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News