செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டுக்கு இன்று ஒரேநாளில் 6 லட்சத்து 72 ஆயிரம் தடுப்பூசி வருகிறது

Published On 2021-06-23 06:00 GMT   |   Update On 2021-06-23 06:00 GMT
தமிழகத்தில் இதுவரை 1.25 கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையின் வேகம் குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் 3-வது அலை வரக்கூடும் என ‘எஸ்ம்ஸ்’ டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு இப்போதே ஆயத்தமாகி வருகிறது. இதற்காக மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1.25 கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 1.32 கோடி தடுப்பூசி தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இன்னும் 18 லட்சம் தடுப்பூசி வர வேண்டிய நிலையில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 240 தடுப்பூசி தமிழகத்துக்கு இன்று வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் கோவிஷீல்டு 4 லட்சத்து 67 ஆயிரத்து 210 டோஸ்களும், கோவேக்சின் 2 லட்சத்து 5ஆயிரத்து 30 டோஸ்களும் இன்று விமானம் மூலம் வருகிறது.

ஒரே நாளில் 6 லட்சத்து 72 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வருவதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News