செய்திகள்
காலில் செருப்பு அணியாமல் சட்டசபைக்கு வரும் பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தியை காணலாம்

செருப்பு அணியாத பாஜக எம்எல்ஏ- சட்டசபையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

Published On 2021-06-23 02:50 GMT   |   Update On 2021-06-23 02:50 GMT
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்பை பெற்றவராக விளங்கி வரும் எம்.ஆர். காந்தி, தற்போது முதல் முறையாக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு காலில் செருப்பு அணியாமல் நடந்து வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி (வயது 75) அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடியை அடுத்துள்ள கீழ்மாவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.காந்தி.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில்தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரத்து 600 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 6 முறை குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அவர் தற்போதுவெற்றியை ருசித்துள்ளார்.

எம்.ஆர்.காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்பை பெற்றவராக விளங்கி வரும் அவர், தற்போது முதல் முறையாக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்துள்ளார். காலில் செருப்பு அணியாமல், கதர் வேட்டி சட்டையுடன் வலம் வரும் நாயகன். தாய் மண்ணில் பாதம் பட வேண்டும் என்பதற்காகவே செருப்பு அணிவதை கைவிட்டுள்ளார்.

1967-ல் ஜன சங்கத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். பிரம்மச்சாரியாக வாழ தொடங்கி, பொதுப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News