செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

Published On 2021-06-21 07:28 GMT   |   Update On 2021-06-21 07:38 GMT
தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

எடப்பாடி பழனிசாமி    செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில்  இடம்பெறவில்லை.

தேர்தல் சமயத்தில்   திமுக    அறிவித்த அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள், தற்போது மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறுகிறார்கள்.





கொரோனா பரவலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்கிற  திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பான அறிவிப்பும் இல்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று கூறியதும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கூட்டுறவு வங்கிகளில் ரத்து செய்யப்பட்ட கடன்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை.


தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News