செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

கொரோனா குறைந்தவுடன் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: கவர்னர்

Published On 2021-06-21 05:32 GMT   |   Update On 2021-06-21 05:32 GMT
பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
சென்னை:

தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

* கொரோனா குறைந்தவுடன்  9 மாவட்டங்களிலும் அனைத்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும்.

*  பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.





* நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டு வந்து ஜனாதிபதியில் ஒப்புதலை பெறுவோம்.

*  மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சேமிப்பு உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.


* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News