செய்திகள்
தடுப்பூசி

தடுப்பூசி தடையின்றி வழங்ககோரி போராட்டம்-கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவிப்பு

Published On 2021-06-20 08:39 GMT   |   Update On 2021-06-20 08:39 GMT
அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7,500 மற்றும் 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட உணவு பொருட்கள் 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, ரங்கராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோலிய  பொருட்கள் மீதான கலால் வரியை உடனே குறைக்கவும், உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து மக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7,500 மற்றும் 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட உணவு பொருட்கள் 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும்.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மாநிலங்களுக்கு தடுப்பூசி தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News