செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைந்தது

Published On 2021-06-19 05:58 GMT   |   Update On 2021-06-19 05:58 GMT
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 15 காசுகள் குறைக்க பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு முட்டை ஏற்றுமதி குறைந்ததால் முட்டை கொள்முதல் விலையை குறைக்க பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைத்து ரூ. 5 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 15 காசுகள் குறைக்க பண்ணையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி முட்டை விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.485 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News